இந்த ஆறு வகை மனிதர்கள் உன் வாழ்வில் இடம்பெற்றுள்ளனரா?

ஆம் என்றால், உன் பயணம் வெற்றியின் பாதையில்!

எந்த ஒரு மனிதனும் தான் செய்யும் தொழிலில் உச்சத்தை அடைந்து வெற்றியாளராகத் திகழவே ஆசைப் படுவான். ஸ்டீவ்ஜாப்ஸ், பில் கேட்ஸ், மார்க் கியூபன் போன்ற பிரபல தொழில் ஜாம்பவான்களின் வாழ்கையினால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நகல்களாக வாழ முயற்சிக்கும் மக்கள் பலருக்கும் அந்த மனிதர்களின் முயற்சிக்குப் பின்னால் இருந்த ஆறுவகை மனிதர்களைப் பற்றி தெறிந்துருக்க வாய்ப்பில்லை.

13

ஒவ்வொரு வெற்றியாளரும் தங்கள் வெற்றிக்குப் பின் இருந்த மனிதர்களைப் பற்றி கூறும்பொழுது அவர்கள் கீழ் வரும்பிறிவுகளுள் வகைப் பட்டிருப்பார். அத்தகைய சிலரின் துணையே பல சாமானியர்களை வெற்றி வீரர்களாகமாற்றியுள்ளது

  1. அசரீரி:

எப்போது தெல்லாம் நம் வாழ்வில் நினைத்த திட்டங்களும், நடத்திய செயல்களும் பொய்த்து, எதிர்பாராத வழியில் நம்மைகூட்டிச் செல்கின்றதோ அத்தருணத்தில் ஒருவர் நம்மை இழுத்து, நம்முள் துவண்டு கிடக்கும் உள்ளத்தைத் தட்டி எழுப்பிநல்வழி காட்டும் அசரீரியாகத் திகழும்.

17

அத்தகைய மனிதரே உன் வாழ்வின் அசரீரி.

  1. கண்காணி:

மனிதர்களுள் பலர் உன்னிடம் குறையை மட்டும் கண்டுபிடித்து உன்னைக் கேலி செய்து உன் தன்னம்பிக்கையைமுடக்குவார்கள். அவர்களுள் வெகு சில உள்ளங்களே உன் நலத்தில் இன்பம் கண்டு, உன் உயர்வில் நாட்டம் கொண்டு, நீசெய்யும் செயல்கள் அனைத்தையும் கவனித்து உன் முடிவுகளை சரியாகத் தேர்ந்தெடுக்க உதவி புரிவர்.

19

இப்படி ஒருமனிதர் உன் வாழ்வில் இடம்பெற்றிருந்தால் நீ வெற்றியின் பாதையில்.

  1. ஆலோசகர்:

எப்போது தெல்லாம் உன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றதோ அல்லது வாழ்வின் முக்கிய முடிவுகளைத்தேர்ந்தெடுக்கும் தருணத்திலோ உன் உள்ளத்தில் ஒருவரின் ஆலோசனை கிட்டினால் நாம் செய்யவிருக்கும் செயலுக்குமிகவும் உதவியாய் அமையும் என்று தோன்றும் அத்தகைய ஒருவரே உன் வாழ்வின் ஆலோசகர்.

18

ஆலோசகர் என்றும்உனக்குச் சாதகமானவற்றையே கூறுவார் என்பது மடமை.

  1. சரி பாதி:

எந்த ஒரு மனிதனுக்கும் பலவீனம் என்று ஒன்றுண்டு. உன் பலவீனத்தை தன் பலத்தினால் ஈடுகட்டும் சாமர்த்தியமுள்ளஒருவர் உன் வாழ்வில் உண்டு எனில், அவரே உன் சரி பாதி.

20

சரி பாதி என்றவுடன் எல்லாவற்றிலும் உன்னுடன் ஒத்து நின்றுஉன் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடப்பவர் என்று எண்ண வேண்டாம். உன்னைப் பற்றியும் உன் தொழில் பற்றியும் நன்கறிந்து உன் நலனுக்காக உழைக்கும் அந்த ஒருவரே உனது சரி பாதியாகத் திகழ்பவர்.

  1. ஒருங்கிணைப்பாளர்:

ஒவ்வொரு தொழிலதிபரும் தன்னோடு புதிய யோசனைகளைப் பொறுமையுடன்  கேட்டு விரைவாக முடிவெடுக்கவல்லாரை துணை வைத்திருப்பர். அத்தகைய ஒருவர் புதிய  யோசனைகளை ஆராய உதவி ஆக்கப்பூர்வமானசெயல்களில் ஈடுபடச் செய்வர். பொதுவாகவே இத்தகையாவர் கற்பனை வழம் மிக்கவராக இருப்பர். ஆக் கற்பனைகொண்டு உன் வெற்றிக்கு உதவுவர். அவரே உன் வாழ்வில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பாளர்.

21

  1. ஊந்து சக்தி:

நீ இன்றுவரை செய்த செயல்களை திரும்பிப் பார்த்தால் அவற்றுள் பல “உன்னால் முடியாது, நீ தோற்று விடுவாய்” என்றுசிலர் கூறிய வார்த்தைகளை பொய்ப்பித்துக் காட்ட நீ முயன்ற விழைவுகளால் நிகழ்ந்தவை.

இப்படி பல்வேறு இடங்களில் உன் மேல் வீசப்பட்ட  இகழ்ச்சி சொற்களே உன் உந்து சக்தியாக அமைந்து, உன்எல்லைகளை நீட்டியது.

உன்னை இகழ்பவர்களே உன் உந்து சக்தி.

16

உன்னால் இந்த ஆறு வகை மனிதர்களை உன் வாழ்வில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால், நீ  வெற்றியின் பாதையில்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s